Responsive Advertisement 2

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டோர் கைது…!



அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் ஐவர், இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.



பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விசாரணை செய்த போது, நான்கு மோட்டார் சைக்கிள்களும், பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்களின் உதிரிப் பாகங்களுடன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.


சந்தேக நபர்கள் பொத்துவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டுள்ள மேற்படி சந்தேக நபர்கள் ஐவரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்





அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டோர் கைது…! அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டோர் கைது…! Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3