Responsive Advertisement 2

பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த பாராவூர்தி சாரதிகள்



வவுனியா தவசிகுளம் கந்தபுரம் கிராமத்தில் தாய் தந்தையினையிழந்து வாழ்ந்து வரும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (16.12.2017) காலை 9.30 மணியளவில் முப்பது முட்டையிடும் கோழிகள் மற்றும் அவற்றுக்காக தீன்கள் வழங்கி வைக்கப்பட்டது.





தந்தை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் 14,18 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் 23,24 வயதுடைய ஆண் மகனும் வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் கடந்த 24.10.2017 அன்று தயாரும் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். இதன் காரணமாக 14 வயதுடைய பெண் பிள்ளையின் கல்வி பாதிப்படைந்தது.





தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிக்கினங்க இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.





இவ் உதவித்திட்டத்தினை நற்பணி மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான பா. கதீஷன், பா. லம்போதரன் , வ. பிரதீபன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.





வவுனியா செய்தியாளர்




பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த பாராவூர்தி சாரதிகள்  பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த பாராவூர்தி சாரதிகள் Reviewed by Admin on December 16, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3