Responsive Advertisement 2

வேட்பாளர்கள் தேடும் படலமும், கட்சித் தாவல்களும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது.



அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்களை தேடும் படலம் நேற்று (14) நல்லிரவைத் தான்டியும் இடம்பெற்று வந்தை காணக்கூடியாகவும் இதில் கட்சி விட்டு கட்சித்தாவல்களும் இடம்பெற்றது.







இந்த வேட்பாளர்களைத் தேடும் பணியில் தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய முண்ணனியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, பொது ஜனபெரமுனை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு வேட்பாளர்களைத் தேடும் பணி நேற்றிரவு முழுவதும் இடம்பெற்றதுடன் இன்று (14) காலை 9.00 மணிவரையும் தேடுதல் வேட்டை மிக முன்மூர்வமாக இடம்பெற்றதை காணக் கூடியாக இருந்தது.







இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நசீர்கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தூய காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டு செயற்பட்டவர் நேற்றிரவு (13) அவரின் ஆதரவாளர்களுடன் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.





இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி மற்றும் அமைச்சர் றஊப் ஹக்கீமின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.சீ.எம்.மர்ஜூன் ஆகியோர் அமைச்சர் றிஷாட் பதீயுதினின் மைல் சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இன்று காலை (14) அம்பாறையில் வைத்து இணைந்துகொண்டு எதிர்வருகின்ற தேர்தலில் போட்யிடுவதற்காக களம் இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 





இந்நிலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சயின் பல போராளிகள் தேசிய காங்கிரஸ் கட்சியிலும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலும் கட்சி மாறி வருகின்ற விடயம் நாளுக்கு நாள் அதிகரித்தவன்னம் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




வேட்பாளர்கள் தேடும் படலமும், கட்சித் தாவல்களும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. வேட்பாளர்கள் தேடும் படலமும், கட்சித் தாவல்களும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. Reviewed by Admin on December 14, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3