கொழும்பில் உள்ள மிண்சார சபையின் தலைமைக் காரியாலயத்தின் முன்வாயலில்் கடந்த 2 நாட்களாக மின்சார சபையின் நிரந்தர தொழிலாளா்கள் சங்கம் உண்னாவிரதம் இருந்து வருகின்றனா்.
அவா்கள் தகவல் தருகையில் - தற்பொழுது மின்சார சபையின் சாதாரண தொழிலாளா்களுக்கு 50 ஆயிரம் ருபாவுக்கும் குறைவாகவே வேதனம், மேலதிக கொடுப்பணவுகள் கிடைக்கின்றன. ஆனால் குளிருட்டப்பட்ட அரைகளில் இருந்து பொறியியலாாளா்களுக்கு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளம் கிடைக்கின்றது. அவா்கள் ஓரு போதும் நாங்கள் ஏறி மிண் இனைக்கும் மிண்சார கட்டையில் நின்று வேளை செய்யும்போது அதனைக் கூட கண்காணிப்பதற்கு கூட இந்த பொறியியலாளா்கள் வர மாட்டாா்கள். அது மட்டுமல்லாமல் தற்போது மிண்சார சபையில் - அரசியல் ரீதியாக மிண்சார சபையில் தொழில்கள் வழங்கப்படுகின்றன. அதனை உடன் நிறுத்தல் வேண்டும். அத்துடன் எங்களது பிரச்சினையை தொழிலாளா் ஆணையாளா். மற்றும் சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் நிவா்த்தி செய்து தரல் வேண்டும் . ஒரு, இரு நாட்களில் எங்களுக்கு தீா்வு கிட்டாவிட்டால் நாடு முழுவதும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த உள்ளதாக இவ் ஊழியா் சங்கத்தின் பிரநிதி தெரிவித்தாா்
மின்சார சபையின் நிரந்தர தொழிலாளா்கள் சங்கம் உண்னாவிரதம்
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:
Reviewed by Admin
on
December 14, 2017
Rating:


No comments: