Responsive Advertisement 2

பேரணியில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தல்.



வவுனியாவில் 16வயது சிறுமி ஓருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், இனி இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது என்று தெரிவித்து இன்று ஓமந்தையிலிருந்து பொலிஸ் நிலையம் வரையான போரணி ஒன்று வவுனியா நொச்சிக்குளம் மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 





இதில் பல புலனாய்வாளர்கள் தமது தொலைபேசியினாலும், புகைப்பட கருவியினாலும் பேரணி நடாத்தியவர்களை புகைப்படம் பிடிப்பதுடன் ஊடகவியலாளர்களையும் சுற்றி புகைப்படம் பிடித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒரு அச்ச நிலையில் பேரணியில் கலந்துகொண்டதுடன் தமக்கு புலனாய்வாளர்களினால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா என்ற கேள்வியையும் மனதிலே சுமந்தபடி இன்று பேரணியில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்





மேலும் நல்லாட்சி அரசிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்வதாக போராட்டகாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் புகைப்படம் எடுக்கிறார்கள். எவ்வாறாயினும் ஆட்சி மாறி நல்லாட்சி எனக் கூறுகின்ற போதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் குறையவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





-சுடர்-




பேரணியில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தல். பேரணியில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தல். Reviewed by Admin on December 10, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3