புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேவைக்கு சமூகமளிக்காவிடின், பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:

No comments: