மொரகொட பொலிஸ் பிரிவின் ரிட்டிகல அலகொல்லாவ பிரதேசத்தின் விவசாய இடமொன்றுக்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்த சம்பவமொன்று கடந்த 08 ஆம் திகதி இப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அதிகரித்த மின்சார தாக்குதலால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இக் காட்டு யானை சுமார் 20 வயது மதிக்கத் தக்கதும்,சுமார் 08 அடி உயரம் கொண்டதும் என தெரிய வந்துள்ளது.இறந்த இவ் யானை அதிகரித்த மின்சார தாக்கத்தால் உயிரிழந்துள்ளது. என வடக்கு வன பரிபாலன வலய மிருக வைத்தியர் பி.கிரிதரன் கடந்த 09 அதே இடத்தில் இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஹேவா பதிரனவின் உத்தரவின் பேரில் அநுராதபுரம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூலனி வீரரத்னவின் மேற்பார்வையின் கீழ் இரண்டு பொலிஸ் குழுக்கள் இது சம்பந்தமான பூரண விசாரணை மேற்கொள்ள நியமிக்கப் பட்டுள்ளனர்.
அநுராதபுரம் நிருபர் ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.
அதிகரித்த மின்சார தாக்குதலால் காட்டு யானை உயிரிழப்பு.
Reviewed by Admin
on
December 16, 2017
Rating:
Reviewed by Admin
on
December 16, 2017
Rating:

No comments: