கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் மு.காவுக்கு அதிக எதிர்ப்புகள் இருப்பதுபோல் தோன்றினாலும், இறுதியில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் மு.காவையே அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெறவைத்தது. அதிலும் திகாமடுல்லையின் பிரதான தேர்தல் களமாக விளங்கும் நிந்தவூரில் மு.கா.வுக்கு அதிகப்படியாக சுமார் 95 சதவீதமான வாக்குகள் கிடைத்ததோடு, இவ்வூரிலிருந்த பெரிய குடும்பங்கள், செல்வாக்கு மிக்க குடும்பங்கள், 90 வீதத்திற்கு மேற்பட்ட கல்விமான்கள், உயரிய பதவிகள் வகிப்போர்கள், மாதர் சங்கங்கள், சமூகசேவை அமைப்புக்கள், தேர்கால சமூகசேவைச்சங்கங்கள், வாக்குவிற்பனை முகவர்கள், விளையாட்டுக்கழகங்கள், பொதுநிறுவனங்களின் பொது ஆதரவு, தேர்தல் உழைப்புக்குழுக்கள், சிறு சிறு குழுக்கள், இளைஞர்கள், வேறு சங்கங்கள் , எதிர்கால அரசியல்வாதிகளாக தம்மை அடையாளம் காட்டியோர் என்பவர்களினதும் ஆதரவும் கௌரவ பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களுக்கு கிடைத்தது. அதனை யாரும் மறுக்கமுடியாது.
மேலும் பக்க துணையாக கட்சிக்கு வாக்குசேகரிக்கும் பணியில் அரசியல் மயப்படுத்தலில் பிரதேச அரசியல்வாதிகள், தேசிய அரசியல்வாதிகள் என்பபோரும் தமது ஆதரவினை முகாவுக்கு வழங்கி அமோக வெற்றிபெறச் செய்தனர்.
எனிவும், பிரதேச சபைத் தேர்தல் என்ற கருத்து தற்போது வேரூன்றிய நிலையில் பல சிக்குமுக்கு நிலைகள் - என்ன எளவுடா இது என்று கேட்கும் அளவுக்கு தோன்றியுள்ளது. இதில் சல்லெடுப்பது சங்கக்கொறச்சல்தான்.
இங்குதான் பிரதான கருதுகோளாக முகாவின் கட்சிக்கொள்கையா? கௌரவ பிரதியமைச்சருக்கு ஆதரவு வழங்கிய குழுக்களில் உள்ளோரின் கொள்கையா? என்ற நிலையும் முகாவில் இருந்து பிரிந்து நிற்கும் கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, முன்னாள் பிரதேசபை தவிசாளர் கௌர தாஹிர் அவர்களின் கொள்கையா என்ற சவால்களும் முன்னோக்கி எறியப்பட்டுள்ளது.
இதில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக மக்களே காணப்படுகின்றனர். இவ்வூரைப்பொறுத்தவரையில் எடுகோளான நிலைப்பாடுகளின் படி நிந்தவூரின் கிழக்குப்புற மக்களின் மனோபாவம், மேற்குப்புற மக்களின் மனோவம் என்ற நிலையில் அரசியல் கருத்துக்கள், வாக்குரிமை பிரிந்துசெல்லும் வடிவங்கள், குடும்ப செல்வாக்குகள் என்பன மாறுபடும் வகையில் வட்டாரங்கள் கிழக்கிலிருந்து மேற்குநோக்கிய துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
எனவே, வேட்பாளர்கள் தங்களது நிலைப்பாடுகளை புரியவைப்பதில் இருவகையான உத்திகளை பிரயோகிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் மத்தியில் கட்சிகளின் முன்முனைத்தாக்குதல் தயாராகிவந்தாலும், இரு அணிகளுக்கிடையிலான கொள்கையின்பாலே மக்களின் ஆதரவுகள் பிரிந்துசெல்லவேண்டும். அதனைப்பற்றிய பிறகு ஆராயவுள்ளேன்.
எனினும், கடந்த கால தேர்தல் முடிவின்படி முகாவுக்கு அமோக ஆதரவுநிலை உள்ளதாக அவ்வணியினர் கணக்கிட்டுள்ளனர் அது யதார்த்தம். ஆயின் மாற்று அணியினர் கொள்கையளவில் முகாவில் இருந்து பிரிந்த புதிய அணியினர். அவர்களின் கொள்கை விளக்கத்தை பொறுத்து அவ்வணியின் வெற்றிய தங்கியிருந்தாலும், கௌரவ தாஹிர் அவர்களின் செல்வாக்கையும், கௌரவ ஹஸன் அலியின் செல்வாக்கையும் புடம்போட்டுப்பார்க்கும் களமாகவே இத்தேர்தல் அமையப்போகின்றது.
ஆக கட்சிக்கொள்கையா? தனிநபர் ஆதிக்கமா என்பதை பொறுத்திருந்தே அவதானிக்கவேண்டியுள்ளது.
எஸ்.எம். சஹாப்தீன்
(ஆசிரியர் - அக்கறைப்பற்று மு.ம.கல்லூரி – தே.பா.)
கட்சிக்கொள்கையா? தனிநபர் ஆதிக்கமா?
Reviewed by Admin
on
December 11, 2017
Rating:
Reviewed by Admin
on
December 11, 2017
Rating:

No comments: