விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் - விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த சுந்தர் சுகிர்தன் மாவட்ட மட்டத்தில் விஞ்ஞான பிரிவில் 3 ஏ பெற்று முதலிடம் பெற்ற மாணவனே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நான் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் 97 புள்ளியை பெற்று சித்தியடையவில்லை. அதே போன்று சாதாரண தர பரீட்சையிலும் 07ஏ சித்திகளையே பெற்றிருந்தேன். எனினும் விடா முயற்சி என்னிடம் காணப்பட்டது. விஞ்ஞான பிரிவை கற்க சென்றபோது விஞ்ஞான பிரிவிலா கற்கப்போகின்றாய் என கேட்டார்கள்.
எனினும் எனக்கு நம்பிக்கை இருந்தது. மாவட்ட ரீதியில் இடம்பெற்ற பரீட்சையில் 05ம் இடத்தை பெற்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதில் இருந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் கற்று இன்று முதலாம் இடத்தை பெற்றுள்ளேன். இதற்கு உறுதுனையாக இருந்த பாடசாலை முன்னாள் அதிபர் த.அமிர்தலிங்கம்,அதற்போதைய அதிபர்,ஆசிரியர்கள்,எனது குடும்பத்தினர் மற்றும் சிரேஸ்ட மாணவர்களிற்கு நன்றியை தெரிவித்துனக்கொள்கிறேன். அத்தோடு நான் விசேட வைத்திய நிபுணராக வவுனியா வைத்தியசாலையில் சேவை செய்வதோடு என்னை கல்வியில் இவ்விடத்தை அடைய உதவிய என் பாடசாலையை அபிவிருத்தி செய்வதோடு என் குடும்பத்தையும் பார்ப்பேன்
இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியலத்தை சேர்ந்த கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவரக்கான பல்கலைக்கழக செலவினை பொறுப்பெடுப்பதாக வடமாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் படி இன்று மாவட்டத்தில் விஞ்ஞான பீடத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றந சுந்தர் சுகிர்தனிற்கு நேரில் சென்றுவாழ்த்து தெரிவித்ததோடு அவரின் பல்கலைக்கழக் செலவு அனைத்தையும்தான்பொறுப்பெடுப்பதா
சிவக்குமார்
விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் - விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
Reviewed by Admin
on
December 28, 2017
Rating:
No comments: