Responsive Advertisement 2

கம்பஹா நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்; வேட்பு மனுத் தாக்கலும் நேற்று முதல் ஆரம்பம்



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் ஆகிய நடவடிக்கைகள்,  நேற்று (18) முதல் விறுவிறுப்பாக ஆரம்பமாகியுள்ள நிலையில், கம்பஹா நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார். 





கம்பஹா மாவட்ட செயலக சுற்று வட்டம் உட்பட நகரின் அனைத்து இடங்களிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





இதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் பிரதான அரசியல் கட்சிகளுக்காக வாகனத் தரிப்பிடங்கள் நான்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நான்கு பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.க., ஸ்ரீல.சு.க., ஸ்ரீல.பொ.பெ., ம.வி.மு. ( ஜே.வி.பி. ) ஆகியவற்றுக்கு நான்கு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக,  கம்பஹா மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முத்தித்த புஸ்ஸெல்ல தெரிவித்துள்ளார்.





வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊர்வலம் மற்றும் கோஷங்கள் எழுப்பிச் செல்லல் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாவட்ட செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே உட்செல்ல இடமளிக்கப்படும் என்றும் பொலிஸ் அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார். 





கம்பஹா மாவட்டத்தின் 13 தேர்தல் தொகுதிகளிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்களுக்கே, நேற்று முதல் இரண்டாம் கட்டமாக கட்டுப் பணம் செலுத்தல் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






( மினுவாங்கொடை நிருபர் )





கம்பஹா நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்; வேட்பு மனுத் தாக்கலும் நேற்று முதல் ஆரம்பம் கம்பஹா நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்; வேட்பு மனுத் தாக்கலும் நேற்று முதல் ஆரம்பம் Reviewed by Admin on December 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3