மினுவாங்கொடை தொகுதியில் பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், வரலாற்றில் முதற்தடவையாக மினுவாங்கொடை நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் முஸ்லிம் பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
மொஹமட் ஹுசேன் சித்தி சுஹைரா என்ற பெண்மணியே இம்முறை நகர சபையில் போட்டியிடுகிறார். பெண் உறுப்பினர்கள் எழுவரைக் கொண்ட பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் எவரும் நிறுத்தப்படாத நிலையில், றிபாஸ் மொஹமட் என்பவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ஆறு உறுப்பினர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு வந்த மினுவாங்கொடை நகர சபைக்கு, புதிய வட்டார எல்லை நிர்ணயப்படி, இம்முறை இந்நகர சபைக்கு ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொடை நகர சபைக்கு முஸ்லிம் பெண் வேட்பாளர் போட்டி
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:

No comments: