சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாலர்களின் வாக்குகளின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபையை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை ஆதரவாலர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாரை மாவட்டத்தில் செல்வாக்கிழந்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்திலே இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்மாவட்டத்தில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் அண்மைக்காலமாக அக்கட்சி மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இது அக்கட்சியினுடைய வங்குறோத்து நிலையை வெளிப்படுத்துகிறது.
இருந்த போதிலும் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் நிலையான வாக்குகளை சூறையாடலாம் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் கங்கனம் கட்டிக்கொண்டு கூட்டுச்சேர்ந்துள்ளது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் மு.கா வசம் இருந்த சில பிரதேச சபைகள் இன்று அக்கட்சிக்கு சவாலாக காணப்படுகின்றது. இந்த சபைகளை அக்கட்சி கைப்பற்ற வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்தாக வேண்டும். அப்போதுதான் குறித்த சபைகளை மு.கா கைப்பற்ற முடியும்.
அதனாலேதான் சம்மாந்துறையிலும் மு.கா ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிடுகிறது. சம்மாந்துறை பிரதேச சபை மு.கா விடமிருந்து பறிபோகும் நிலைமைகள் காணப்படும் இக்காலகட்டத்தில் மு.கா ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாலர்களை அரவணைத்துக் கொண்டே செயற்பட்டிருக்க வேண்டும். மேற்படி பிரதேசத்திலே ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமான வாக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க மு.கா ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை பிரதேச ஆதரவாலர்களை புறக்கனித்தே குறித்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியிருப்பதனை அவதானிக்க முடிகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாகவும் 50வீதமானவர்களை சேர்த்துக்கொள்வது எனவும் பரவலாக பேசப்பட்டது. இதில் முஸ்லிம் வட்டாரத்தில் 3பேருக்கும், தமிழ் வட்டாரத்தில் 2பேருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் பேச்சளவில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வேட்பு மனு தாக்கல் இறுதி நேரத்தில் மு.கா ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த எந்தவொரு நபருக்கும் சந்தர்ப்பம் வழங்காமை ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாலர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அக்கட்சியின் ஆதரவாலர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பெரும் ஏமாற்றத்துடன் ஐ.தே.கட்சி ஆதரவாலர்கள் எவ்வாறு மு.கா சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்கின்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்துள்ளது.
இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாலர்களின் வாக்குகளின்றி மு.கா ஒருபோதும் சம்மாந்துறை பிரதேச சபையினை கைப்பற்ற முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். குறித்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுக்கு மு.கா துரோகமிழைத்தமை ஒரு வரலாற்றுத் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.
மு.கா சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்ற முடியாது
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:
Reviewed by Admin
on
December 18, 2017
Rating:

No comments: