தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சிறு நீரக வைத்தியசாலை ஒன்றை பொலன்னறுவயில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கான அடிக்கல் ஜனாதிபதியினால் அண்மையில் நட்டி வைக்கப்பட்டன.ஜனாதிபதி சீன அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் சீன குடியரசு மூலம் இதற்கான நிதி உதவிகள் வழங்கப் படவுள்ளன.இதற்கு சுமார் 120 கோடி ரூபா பணம் நிர்மானப் பணிகளுக்காக செலவிடப் படவுள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்துள்ளார்.
இங்கு அமைக்கப்படும் புதிய சிறு நீரக வைத்தியசாலை மூலம் சிறு நீரக நோய் பராமரிப்பு,சிறு நீரக சத்திர சிகிச்சை,இரத்தம் சுத்திகரித்தல், இரசாயன பரிசோதனை கூடம்,போன்ற சிறு நீரக நோயுடன் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மற்றும் ஆலோசனைச் சேவைகள் உட்பட புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பல்வேறு பிரிவுகள் உட்பட வெளி நோயாளர் பிரிவு,ஆரம்ப வைத்திய பிரிவு,இரத்த வங்கி,போன்றன இதில் அடங்குவதோடு சுமார் 200 கட்டில்களுடன் கூடிய வார்ட் தொகுதி அடங்கிய வைத்தியசாலையாக இது அமையவுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வ.ம. மாகாணத்தில் மாத்திரம் இது வரையில் சுமார் 22000.பேர்கள் வரையில் இந் நோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் நிருபர்
ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சிறு நீரக வைத்தியசாலை பொலன்னறுவயில் .
Reviewed by Admin
on
December 12, 2017
Rating:
Reviewed by Admin
on
December 12, 2017
Rating:

No comments: