Responsive Advertisement 2

புத்தகங்களை அச்சடிக்கும் செலவீனம் 7 மடங்கு அதிகரிப்பு-

 



2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 16,000 மில்லியன் செலவாகும் என கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐலப்பெரும தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டுக்கான மொத்த செலவு 2,338 மில்லியன் ஆகும், அதாவது அடுத்த ஆண்டுக்கான செலவு ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.


வரவிருக்கும் கல்வியாண்டுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 45% அச்சிடுவதற்கு மாநில அச்சகக் கூட்டுத்தாபனம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும், அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு இந்தியக் கடன் திட்டத்தின் மூலம் தேவையான காகிதத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் மீதமுள்ள 55 வீதம் தனியார் துறை அச்சிடும் இதற்காக 22 தனியார் துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர்  தெரிவித்துள்ளார்.


விடியல் செய்திகள்

புத்தகங்களை அச்சடிக்கும் செலவீனம் 7 மடங்கு அதிகரிப்பு- புத்தகங்களை அச்சடிக்கும் செலவீனம் 7 மடங்கு அதிகரிப்பு- Reviewed by Admin on November 18, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3