மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாபுரத்தில் நேற்று (11) மாலை இளைஞன் ஒருவர் புகையிரதத்தின் முன் பக்கமாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கொலன்னாவ நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் தேவாபுரத்தினூடாக பயணிக்கும் போதே மேற்படி சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
சம்பவ இடத்திலேயே இளைஞன் மரணமடைந்ததால், அதே புகையிரதத்தில் சடலத்தை ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு புகையிரதம் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.
விடயமறிந்த சந்திவெளி பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது, பலியான இளைஞன் அலைமகள் வீதி, சித்தாண்டியைச் சேர்ந்த சிவகுமார் குகேந்திரன் (25) என அடையாளம் கண்டுள்ளனர்.
தனது பேர்ஷினுல் இருந்த சிறுதொகை பணத்தை காணவில்லையென சகோதரிகளுடன் முறன்பட்டு வீட்டிலிருந்து மாலை 04.00 மணியளவில் போதையுடன் வெளியேறிச் சென்ற இவர், மாலை 05.25 க்கு தேவாபுரத்தால் பயணித்த புகையிரத்தின் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.
சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து, பிரேத பரிசோதணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் இன்று (12) ஒப்படைத்தார்.
இவரது தலை, முகம், கழுத்து என்பன சிதைவுற்று இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்திருப்பதாக மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் தெரிவித்தார்.
(ஏறாவூர் நஸீர்)
Reviewed by Admin
on
November 13, 2022
Rating:

No comments: