Responsive Advertisement 2

உலக விஞ்ஞான தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் விஞ்ஞான பாட செயன்முறைக் கண்காட்சி

 



S.M.Z.சித்தீக் (DMC)


நவம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உலக விஞ்ஞான தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு நவம்பர் மாதம் 10 - 17 வரையிலான காலப்பகுதியில் விஞ்ஞான வாரமொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளது. தேசிய விஞ்ஞான வாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்குமுகமாக 'உலக புரிந்துணர்வுக்காக விஞ்ஞானம்' என்ற தொனிப்பொருளின் கீழ் உலக விஞ்ஞான தின கொண்டாட்டத்தின்  பிரதான வைபவம் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் கொழும்பு டீ.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.


அதேவேளை சம்மமாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள இறக்காமமம் அஸ்றப் மத்திய கல்லூரியில்   இன்று 2022.11.14 ஆம் திகதி சிரேஷ்ட விஞ்ஞானப் பாட ஆசிரியரும் பாட இணைப்பாளருமான  ஏ.எல்.றிஸ்வான் அவர்களின் வழிகாட்டலில் அதிபர் எம்.ஐ.மாஹிர் தலைமையில் இடம்பெற்றது. 


மாணவர்களின் விஞ்ஞான பாட அறிவை செயன்முறைப் பயிற்சி ரீதியாக விருத்தி செய்து பாடசாலையின் விஞ்ஞான பாடத்திற்கான அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற. இந் நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் S.M.M.அமீர், கோட்டக் கல்வி அதிகாரி  U.L. மஹ்மூது  லெவ்வை, இணைப்பாட விதானத்திற்குப் பொறுப்பான A.M.S. இர்பானா  (SLPS) உள்ளிட்ட இன்னும் பல கல்வி அதிகாரிகளும் அதிபர்மார்களும் கலந்துகொண்டனர்.








உலக விஞ்ஞான தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் விஞ்ஞான பாட செயன்முறைக் கண்காட்சி உலக விஞ்ஞான தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் விஞ்ஞான பாட செயன்முறைக் கண்காட்சி Reviewed by Admin on November 14, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3