Responsive Advertisement 2

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு

 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட அந்த இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இருந்த கொடூரமான செய்தியால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், 2014ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தண்டனையை உறுதி செய்தது.

ஆனால், கடந்த திங்கள்கிழமையன்று அதற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்றம் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த ஆண்களை விடுத்தது.

அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கு “உறுதியான மற்றும் தெளிவான சான்றுகள்” இல்லையென்று கூறியது.

2022ஆம் ஆண்டின் இந்தியாவில் நீதி இப்படித்தான் இருக்கும்,” என்று ட்விட்டரில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மனச் சோர்வைடைந்த அந்தப் பெண்ணின் தந்தையுடைய ஒளிப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மத கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளானது மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளை விடுதலை செய்ய குஜராத் மாநில அரசின் சமீபத்திய உத்தரவுடன் இந்தத் தீர்ப்பை சிலர் ஒப்பிடுகின்றனர்.

அந்த பெண்ணின் தந்தை என்னிடம் “நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சில நிமிடங்களில் பொய்த்துப் போனது” என்று கூறினார்.

“நாங்கள் நீதிக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யும் என்றும் என் மகளைக் கொன்றவர்கள் இறுதியாகத் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் நம்பினோம்,” என்று அவர் கூறினார்.

19 வயதான அந்த பெண், தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா என்ற கீழ்நடுத்தர வர்க்க கிராமப்புறத்தில் வசித்து வந்தார். ஜனவரி 2012இல் அவர் தலைநகரின் புறநகர்ப் பகுதியான குர்காவுனில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருந்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அவருடைய குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் பாலியல் வல்லுறவு எதிர்ப்பு ஆர்வலர் யோகிதா பயானா, “அவர் தனது முதல் சம்பளத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார்,” என்கிறார்.

பிப்ரவரி 9, 2012 அன்று இரவு அந்த பெண் மூன்று நண்பர்களுடன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சிவப்பு நிற காரில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு Reviewed by Admin on November 09, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3