SMZ.சித்தீக் (DMC)
உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் போசாக்கு மட்டத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்குமான அரிசிப் பொதிகள் இன்று 2022.11.29 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் நிதியுதவியின் மூலம் வழங்கப்பட்ட இவ் அரிசி ஒரு மாணவனுக்கு 10Kg வீதம் வழங்கப்படவுள்ளது.
சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள இறக்காமம்,நாவிதன்வெளி, சம்மாந்துறை ஆகிய கல்விக் கோட்ட மாணவர்களுக்கு மொத்தமாக 104850 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது.
இறக்காமம் கல்விக் கோட்டத்திலுள்ள றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவர்களுக்காக 5210 கிலோ நிறை கொண்ட அரிசிப் பொதிகள் இன்று 29-11-2022 கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் MAM.பஜீர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Admin
on
November 29, 2022
Rating:

No comments: