பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என கூறப்படும் இசுறு பண்டாரவின் தொலைபேசி குரல் பதிவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குரல் பதிவு தொடர்பில் இசுறு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குரல் பதிவு சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற உரையாடல் அல்ல என இசுறு பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்த தொலைபேசியில் எப்போது இடம்பெற்ற உரையாடல் மற்றும் குரல் பதிவு தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
இசுறு பண்டாரவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
Reviewed by Admin
on
November 21, 2022
Rating:
Reviewed by Admin
on
November 21, 2022
Rating:

No comments: