Responsive Advertisement 2

ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்?



 மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி தனது பெனால்டியை நேராக கோல் போஸ்டுக்குள் அனுப்பி இந்த வெற்றியை உறுதி செய்தபோது, ஓர் அற்புதமான வரலாற்றை கால்பந்து உலகில் உருவாக்கினார்.

அதன்மூலம், ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயினை வெளியேற்றி, மொராக்கோ முதல்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது.

தனது நாட்டுக்காக ஒரு காவிய வெற்றியை வழங்கிய பிறகு, அவர் தனது தாயுடன் பகிர்ந்துகொண்ட அன்பு நிறைந்த தருணம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மொராக்கோவை வெற்றியின் பக்கம் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பிறகு, 24 வயதான அந்த வீரர் ரசிகக் கூட்டத்திற்கு நடுவே தனது தாயைத் தேடினார். தாயைக் கண்டுபிடித்து, அவரிடம் ஓடி வந்து, பார்ப்பவர் இதயத்தைத் தொடும் வகையில் வெற்றி அரவணைப்பைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்? ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்? Reviewed by Admin on December 09, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3