Responsive Advertisement 2

கூரையில் குடைசாய்ந்த மரம் குளறுபடியின்றி அகற்றப்பட்டது

 



SMZ. சித்தீக் (DMC)


நாட்டில் நிலவிவரும் பனி மூட்டமும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக இயல்பு வாழ்கையிலும் இலங்கை மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்  "மாண்டெஸ்" சூறாவளி  வீசும்  அபாயமும் ஏற்பட்டுள்ளது. 


அதே வேளை இலங்கையின் கிழக்கு மாகாணம்;  சம்மாந்துறை வலையத்திலுள்ள றோயல் கனிஷ்ட கல்லூரியில்   வகுப்பறைக்கு அருகிலிருந்த மரமொன்று கூரையில் சாய்ந்துள்ளது. 



மாணவர்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்ட அதிபர் எம்.ஏ.எம்.பஜீர்,  ஆசிரியர்கள்,  பெற்றாரின் உதவியுடன் வகுப்பறைக்கு எவ்வித இடர்பாடுமின்றி உடநடியாக மரம் வெட்டி அகற்றப்பட்டது.


இது "மாண்டெஸ்" சூறாவளியை வரவேற்பதற்கான நிகழ்தகவாக இருக்கலாமெனவும் பெற்றார்களால் சந்தேகிக்கப்படுகிறது.



கூரையில் குடைசாய்ந்த மரம் குளறுபடியின்றி அகற்றப்பட்டது கூரையில் குடைசாய்ந்த மரம்  குளறுபடியின்றி அகற்றப்பட்டது Reviewed by Admin on December 08, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3