Responsive Advertisement 2

வெற்றிமாறனுடன் இணையும் தளபதி: முரட்டு சம்பவம் லோடிங்.!

 



வெற்றிமாறனின் 'விடுதலை' படம் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக விஜய்யை இயக்கவுள்ளதாக

தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் காஷ்மீர் படப்பிடிப்பை அண்மையில் முழுவதுமாக நிறைவு செய்தனர் படக்குழுவினர். இதனையடுத்து விரைவில் சென்னையில் 'லியோ' படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.



தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். ரிலீஸ் மட்டுமில்லாமல் இவர் படங்களின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் சோஷியல் மீடியாவை தெறிக்கவிடுவார்கள் ரசிகர்கள். கடந்த ஜனவரியில் வெளியான 'வாரிசு' படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்


கோலிவுட் சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக 'லியோ' உருவாகி வருகிறது. 'மாஸ்டர்' படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் இணைந்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரிஷா ஜோடியாக விஜய் இந்தப்படத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் 'லியோ' படத்தில் நடிக்கின்றனர்.


இந்நிலையில் விஜய் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'டாணாக்காரன்' படத்தை இயக்கியவரும், வெற்றிமாறனின் உதவியாளருமான தமிழ் பேட்டி ஒன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்யும் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.


பாலிவுட்டில் பிரியங்கா சோப்ராவுக்கு நடந்த கொடுமை: வெளியான அதிர வைக்கும் தகவல்.!


வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் மூலம் சூரி ஹீரோவாக களமிறங்கியுள்ளார். விஜய் சேதுபதியும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' படம் போலவே 'விடுதலை' படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக இந்தப்படம் பேச்சுவார்த்தையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய், வெற்றிமாறன் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

வெற்றிமாறனுடன் இணையும் தளபதி: முரட்டு சம்பவம் லோடிங்.! வெற்றிமாறனுடன் இணையும் தளபதி: முரட்டு சம்பவம் லோடிங்.! Reviewed by Admin on March 30, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3