Responsive Advertisement 2

8 ஓட்டங்கள் எடுத்தால் புதிய சாதனை!


ஐ.பி.எல். போட்டியின் வெற்றிகரமான தலைவர் டோனி. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று உள்ளார்.

இதில் 4 முறை சி.எஸ்.கே. கிண்ணத்தை வென்று உள்ளது. ரைசிங் புனே அணிக்கு தலைவராக பணி ஆற்றிய போதும் டோனி அந்த அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்தார்.
41 வயதான டோனி ஐ.பி.எல்.லில் அதிக போட்டியில் விளையாடியவா் என்ற சாதனையில் இருக்கிறார். அவர் 235 ஆட்டத்தில் விளையாடி உள்ளார். இந்த சீசனோடு டோனி ஐ.பி.எல்.லில் ஓய்வு பெறுகிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி 5 ஆயிரம் ஓட்டங்களை தொடுவாரா? என்ற எதிர் பார்க்கப்படுகிறது.
அவர் 207 இன்னிங்சில் 4992 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். சராசரி 39.30 ஆகும். அதிகபட்சமாக 80 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். 24 அரை சதம் அடித்துள்ளார். 5 ஆயிரம் ஓட்டங்களை எடுக்க டோனிக்கு இன்னும் 8 ஓட்டங்களே தேவை. இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது அவர் 5 ஆயிரம் ரன்னை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
5 ஆயிரம் ஓட்டங்களை எடுக்கும் 7 வது வீரர் என்ற பெருமையை டோனி பெறுவார். விராட் கோலி (6706 ஓட்டங்கள்), தவான் (6284), வார்னா் (5937), ரோகித் சர்மா (5880), ரெய்னா (5528), டிவில்லியர்ஸ் (5162) ஆகியோர் வரிசையில் டோனி இணைகிறார்.
8 ஓட்டங்கள் எடுத்தால் புதிய சாதனை! 8 ஓட்டங்கள் எடுத்தால் புதிய சாதனை! Reviewed by Admin on April 04, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3