Responsive Advertisement 2

பிரஷான் டி விஸ்ஸரின் முதல் நூல் “Phoenix Generation” வெளியீடு மற்றும் Sri Lanka Unites இலிருந்து விடைபெறும் நிகழ்வு


இளைஞர்கள் தலைமையிலான நல்லிணக்கத்தின் புகழ்பெற்ற ஆதரவாளர், ஆர்வலர், பேச்சாளர் மற்றும் மோதல் நிலைமாற்றத்தில்  பேராசிரியரான பிரஷான் டி விஸ்ஸர், கடந்த மார்ச் 30, 2023 அன்று BMICH Cinema Lounge இல் இடம்பெற்ற ஒரு சிறப்பு நிகழ்வின்போது தனது முதல் புத்தகமான Phoenix Generation ஐ வெளியிட்டார்.பிரஷான் டி விஸ்ஸர் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்திற்கான இளைஞர் இயக்கங்களான Sri Lanka Unites (www.srilankaunites.org) மற்றும் Global Unites (www.globalunites.org) ஆகியவற்றின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார்.

அவரது முதல் புத்தகம், Phoenix Generation அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய மாற்றத்தில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வரலாற்று ரீதியில் இயங்கிய மாற்றத்திற்கான இயக்கங்கள், மற்றும் Sri Lanka Unites என்ற அமைதிக்கான பாரிய இளைஞர் இயக்கத்தை நிறுவி வழிநடத்தியமை மற்றும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் அமைதிக்கான இளைஞர் இயக்கங்களில் ஒன்றான Global Unites ஆகியவற்றை நிறுவி வழிநடாத்தியதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட பதினைந்து வருட அனுபவத்திலிருந்து, இந்த புத்தகத்தின் மூலம் இளைஞர்கள் தலைமையிலான மோதல் மாற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியத்தை கருத்தில் கொள்ளுமாறு தனது வாசகர்களை வலியுறுத்துகிறார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆன்மீக ஆலோசகர் டாக்டர் ஜோயல் ஹண்டர் இந்த நூலைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், “ஒரு நல்ல உலகை மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப்புத்தகம் ஒரு இயக்கத்தையும் பாரிய உலகளாவிய அமைப்பையும் நிறுவிய உலகின் தலைசிறந்த இளம் தலைவர்களில் ஒருவரால் எழுதப்பட்டுள்ளது. இது நமது எதிர்காலத்தை வடிவமைக்கும்… இந்நூல், அதன் நம்பிக்கையால் ஊக்கமளிக்கிறது, அதன் கதைகளால் ஈர்க்கக்கூடியது, அதன் வரலாற்றில் உண்மைத்தன்மையைக் கொண்டுள்ளது. நாம் நமது இளைய தலைவர்களுடன் ஒன்றுசேரவும், ஒத்துழைப்பு மற்றும் திறனை நிறைவேற்றும் எதிர்காலத்தை நோக்கி செல்லவும் Phoenix Generation எங்களை அழைக்கிறது.

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு முன்னர், 2006 ஆம் ஆண்டு Sri Lanka Unites நிறுவப்பட்டதிலிருந்து இந்த இயக்கம் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று நாடு முழுவதும் அண்ணளவாக 30,000 உறுப்பினர்கள், 40 பணியாளர்கள் மற்றும் ஒன்பது நல்லிணக்க நிலையங்கள் (கிட்டத்தட்ட ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு நல்லிணக்க நிலையம்) மூலம் இலங்கையிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் தீவிரமாக ஈடுபடுகின்றது. Sri Lanka Unites மூலம் உந்தப்பட்டு, ‘Global Unites’ என்ற உலகளாவிய இயக்கம் 2015 இல் உருவாக்கப்பட்டு பிரஷான் டி விஸ்ஸரின் தொலைநோக்குடைய தலைமையின் கீழ் 13 நாடுகளில் இளைஞர்கள் தலைமையிலான நல்லிணக்கத்திற்கான பிரதான இயக்கமாக செயல்படுகிறது.

Phoenix Generation இன் வெளியீட்டு நிகழ்வானது பிரஷான் டி விஸ்ஸர் Sri Lanka Unites இலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெறுவதற்கான ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. Sri Lanka Unites இனை ஒரு திறமைவாய்ந்த இளம் தலைமுறையினரின் கைகளில் ஒப்படைத்துள்ள டி விஸ்ஸரின் கவனம் தற்போது Global Unites இன் விஸ்தரிப்பை நோக்கித் திரும்பியுள்ளது. உள்நாட்டில், அவரது பணியானது  கொள்கை மாற்றம் மற்றும் இளம் தலைமுறையின் தலைமையிலான புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு வழி உருவாக்குவதே பிரதான கவனமாக இருக்கும்.
பிரஷான் டி விஸ்ஸரின் முதல் நூல் “Phoenix Generation” வெளியீடு மற்றும் Sri Lanka Unites இலிருந்து விடைபெறும் நிகழ்வு பிரஷான் டி விஸ்ஸரின் முதல் நூல் “Phoenix Generation” வெளியீடு மற்றும் Sri Lanka Unites இலிருந்து விடைபெறும் நிகழ்வு Reviewed by Admin on April 04, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3