Responsive Advertisement 2

அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கண் சிகிச்சை உபகரணம் வழங்கி வைப்பு



(எஸ்.எம்.அறூஸ்)


அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சைப் பிரிவிற்கு கொமர்சியல் வங்கியின் அக்கறைப்பற்று கிளையினால் கண் சத்திர சிகிச்சைக்கான நுணுக்குக்காட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது.


அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மொமர்சியல் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர்  அருளம்பலம் ஜெயபாலன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண் சத்திர சிகிச்சைக்கான நுணுக்குக்காட்டியை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மொர்சியல் வங்கியின் அக்கறைப்பற்று கிளை முகாமையாளர் கே.சாந்திகுமார், கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் அனுருத்த ரத்நாயக்க,அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்..சி.ஹையு மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை இப்பிராந்திய மக்களுக்கு பல்வேறுபட்ட வைத்திய சேவைகளை வெற்றிகரமாக வழங்கிவரும் நிலையில் கண் சிகிச்சைப்பிரிற்கு இவ்வைத்திய உபகரணம் கிடைக்கப்பெற்றிருப்பது கண்நோயாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.





























அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கண் சிகிச்சை உபகரணம் வழங்கி வைப்பு அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கண் சிகிச்சை உபகரணம் வழங்கி வைப்பு Reviewed by Admin on May 11, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3