(எஸ்.எம்.அறூஸ்,எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸர்ரபினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் மருதமுனை கடற்கரை பிரதேசத்தை கடல் அரிப்பிலிருந்து தடுப்பதற்கும், கடற்கரையின் அழகினை பேணுவதற்குமாக தென்னை மரங்கள் நடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கான இணைப்பாளர் பி.எம். முகம்மட் ஜஃபர் அவர்களின் ஏற்பாட்டில் மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அமீர், சரோ குழுமத்தின் பணிப்பாளர் தாஜூதீன், பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஜே.எம்.அஸ்ஹர், அட்டாளைச்சேனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.கியாஸதீன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் ஷா , சம்ஸ் மத்திய கல்லூரியின் 91 பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் ஒரு மில்லியன் மரங்களை அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் நடுவதற்கான நோக்கோடு இவ்வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அம்பாரை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், திருக்கோவில், நிந்தவுர், சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை,பானம, அக்கறைப்பற்று,சாய்ந்தமருது,பாலமுனை, ஒலுவில்,நாவிதன்வெளி, மாவடிப்பள்ளி,வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசங்களில் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீடுகள், பொது இடங்கள், கடற்கரைப் பிரதேசங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மத ஸ்தாபனங்கள்,வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
Reviewed by Admin
on
May 15, 2023
Rating:

No comments: