Responsive Advertisement 2

சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

 



(அபு அலா)


அம்பாறை மாவட்ட - அலிகம்பை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்ற மருத்துவ தேவைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தலைமையிலான குழுவினர் விஜயமொன்றை மேற்கொண்டு அப்பிரதேச சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடி அப்பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 

குறித்த பிரதேச மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதற்கும், அம்மக்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும், தொற்றுநோய்கள் மற்றும் தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


தற்போது குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற 


மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடி என்பனவற்றை கருத்திற்கொண்டும் குறித்த பிரதேசத்திலேயே வைத்திய சேவைகளை வழங்குவதற்குமான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக தொற்றுநோய்கள் மற்றும் தொற்றநோய்கள் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான வைத்திய சேவைகளை குறித்த பிரதேச ஆரம்ப வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதனை இன்னும் மேம்படுத்தி பல வைத்திய சேவைகளை மக்களுக்கு வழங்கி வைக்கும் நோக்கிலேயே செயலாளர் தலைமையிலான குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த விஜயத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். 








சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் Reviewed by Admin on May 16, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3