Responsive Advertisement 2

இறக்காமத்தில் ஹஜ் கார்னிவேல் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி

 


(எஸ்.எம்.அறூஸ்)


ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பிக்குமுகமாக இறக்காமம் றெக்ஸ்டா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் கார்னிவேல் மாபெரும் உதைபந்தாட்ட சம்பியன் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


இறக்காமம் றெக்ஸ்டா அமைப்பின் தலைவரும்,முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினருமான எம்.எல்.முஸ்மி தலைமையில் இடம்பெறவுள்ள  இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் மிகப்பிரபலமான ஏறாவுர் உதைபந்தாட்ட அணியும், அம்பாரை மாவட்டத்தின் முதன்மை அணிகளில் ஒன்றான இறக்காமம் பிர்லியண்ட் உதைபந்தாட்ட அணியும் விளையாடுகின்றது.


மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற இச்சுற்றுப்போட்டி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இச்சுற்றுத் தொடரில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 16 உதைபந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.


அரையிறுதிப்போட்டியில் இறக்காமம் பிர்லியண்ட் அணி இறக்காமம் யுத் அணியை 4 – 0 உன்ற கோல்கள் அடிப்படையிலும் ஏறாவுர் உதைபந்தாட்ட அணி திருகோணமலை உதைபந்தாட்ட அணியை 8 – 2 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றி பெற்றே இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இறுதிப்போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 70 ஆயிரம் ரூபா பணமும், இரண்டாமிடம் பெறுகின்ற அணிக்கு கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்படவுள்ளது.


இறுதிப்போட்டி நிகழ்வுகளில் இறக்காமம் பிரதேசத்தின் மூத்த,சிரேஸ்ட உதைபந்தாட்ட வீரா்கள், சமூக சேவையாளர்கள்,கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் போட்டியைக் கண்டுகளிக்க கூடுதலான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பிரபல சமூக சேவையாளரான எம்.எல்.முஸ்மி இறக்காமம் பிரதேசத்தில் றெக்ஸ்டா அமைப்பின் மூலம் பல்வேறு நிகழ்வுகளையும்,சமூகப்பணிகளையும் செய்து வருகின்றமை விசேட சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இறக்காமத்தில் ஹஜ் கார்னிவேல் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இறக்காமத்தில்  ஹஜ் கார்னிவேல் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி Reviewed by Admin on July 03, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3