Responsive Advertisement 2

அக்கறைப்பற்று ROYAL TECHNOLOGICAL CAMPUS மாணவர்களை ஏமாற்றி மோசடி

 


அக்கறைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ROYAL TECHNOLOGICAL CAMPUS எனும் நிறுவனம் மூன்றாம் நிலைக்கல்வி,தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாமல் மாணவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


ROYAL TECHNOLOGICAL CAMPUS நிறுவனத்தில் QS & AUTOCAD மற்றும் பல பாடநெறிகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பிட்ட மாணவர் ஒருவர் QS & AUTOCAD பாடநெறியை மேற்கொள்வதற்காக அவரிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளனர். அத்தோடு பட்டமளிப்பு விழாவிற்காக 25 ஆயிரம் ரூபாயும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


குறித்த மாணவர் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டையும் அந்த நிறுவனம் வழங்கியிருக்கின்றது.


பட்டமளிப்பு விழா கொழும்பில் இடம்பெற்றபோது குறித்த மாணவர் குடும்ப சகிதம் சென்று கலந்து கொண்டிருக்கின்றார். அதற்காக அவரது குடும்பம் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளுக்காக சுமார் 50 ஆயிரம் பணம் செலவாகியிருக்கின்றது.


மிகவும் மகிழ்ச்சியோடு பட்டமளிப்பு விழாவில் குறித்த மாணவரும், அவரது பெற்றோர்களும் கலந்து கொண்ட நிலையில்  பட்டமளிப்பு நிகழ்வில் குறித்த மாணவருக்கு சான்றிதழ் இல்லாத வெற்றுக் குழாயே கிடைத்துள்ளது.


மிகவும் அதிர்ச்சியடைந்த மாணவரும் அவரது பெற்றோர்களும்  குறித்த நிறுவனத்திடம் முறையிட்டபோது, இன்னும் பத்து நாட்களில் உங்களுக்கான சான்றிதழ் கிடைக்கப்பெறும் என்று சமாளித்துள்ளனர்.


அதுமட்டுமல்ல பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்ட வெற்றுக்குழாயில் EUROPEAN பல்கலைக்கழக கல்லூரி என எழுதப்பட்டுள்ளது.


ஆனால்,பல நாட்கள் கடந்தும் குறித்த மாணவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் கவலையடைந்த குறித்த மாணவரான மர்ஜான் றிக்காஸ் அஹமட் குறித்த ROYAL TECHNOLOGICAL CAMPUS நிறுவனம் தன்னிடம் பொய்யான விடயங்களைக்கூறி பணம் சம்பாதித்து ஏமாற்றியுள்ளதாக அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


அதுமட்டுமல்ல மூன்றாம் நிலைக்கல்வி,தொழிற் கல்வி ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டுக்கமைவாக  குறித்த ROYAL TECHNOLOGICAL CAMPUS நிறுவனம் தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்த நிறுவனத்தினால் எவ்வித சான்றிதழும் வழங்க முடியாது என்றும் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு அறிவித்துள்ளது.



எந்தவித கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பதிவுக்கட்டணமாகவும்,பட்டமளிப்பு விழா கட்டணமாகவும் பல ஆயிரம் ரூபாய் பணங்களை பெற்றுக்கொண்டு சான்றிதழும் வழங்காமல் இப்படியான மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாகும்.


இப்படியான போலி நிறுவனங்களில் பணங்களை செலுத்தி தொழிற்கல்வி கற்பதை இதன்பிறகாவது மாணவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.



 

அக்கறைப்பற்று ROYAL TECHNOLOGICAL CAMPUS மாணவர்களை ஏமாற்றி மோசடி அக்கறைப்பற்று ROYAL TECHNOLOGICAL CAMPUS மாணவர்களை ஏமாற்றி மோசடி Reviewed by Admin on July 03, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3