(எஸ்.எம்.அறூஸ்)
பாக்கிஸ்தான்
நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி இன்று காலை (2023.07.07)அட்டாளைச்சேனைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்முனை
மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் றஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட 70 குழாய்க்கிணறுகள்
மற்றும் மூன்று பொதுக்கிணறுகள் இதன் போது பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாறூக் புர்கியினால் திறந்து வைக்கப்பட்டது.
சுத்தமான
குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி உதவியின் மூலம் YWMA நிறுவனத்தின் மூலம் இக் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களையும், அவர்களின் இடங்களையும் பார்வையிட்டதுடன் அவர்களது தேவைப்பாடுகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகளையும், மென்பந்து கிரிக்கெட் துடுப்பு மட்டைகளையும் வழங்கி வைத்தார்.
அத்தோடு
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்ய பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர்
பாறூக் புர்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியதுடன் நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலைக்கு எதிர்காலத்தில் உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில்
அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார்,பாக்கிஸ்தான்
உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், றஹ்மத் மன்சூர் பவுண்டேசன் அமைப்பின் நிர்வாகிகள் அஸ்வர் சாலி,றிஸ்வி, பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அப்துல் மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by Admin
on
July 07, 2023
Rating:











No comments: