(எஸ்.எம்.அறூஸ்)
அம்பாரை மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் விளையாட்டு சங்கங்கள், வீர,வீராங்கனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,சவால்கள் குறித்து ஆராயும் கூட்டம் நேற்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தலைமையில் இடம்பெற்றது
இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க,டாக்டர் திலக் ராஜபக்ஸ, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் மாவட்டத்திலுள்ள விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் விளையாட்டுத்துறையில் முன்னணியி ல் திகழ்வதாகவும், பயிற்சிகளையும், எனைய வசதிகளையும் பெற்றுக்கொள்வதில் தாம் பெரிதும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும்“ சங்கங்களின் பிரதிநிதிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு விளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக கூடுதலான நிதி உதவிகளை அம்பாரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அம்பாரை மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் விளையாட்டு வீரா்கள் மற்றும் விளையாட்டு சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனம் எடுப்பதாகவும் தெரிவித்ததுடன் மாவட்ட மட்டத்தில் திறமையான இளம்வீரா்களை இனம் கண்டு அவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்காக சிறந்த வீரா்களை உருவாக்க முடியும். அதற்காக பயிற்சியாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
அம்பாரை மவாட்டத்தில் ரக்பி உட்பட பல விளையாட்டு சங்கங்கள் இல்லாமல் இருப்பதைக் காண்கின்றேன். எதிர்காலத்தில் அதற்குரிய சங்கங்களை அமைத்து அவ்விளையாட்டுக்களை வளர்தெடுக் க வேண்டும் எனம் அமைச்சர் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
Reviewed by Admin
on
July 27, 2023
Rating:
No comments: