(எஸ்.எம்.அறூஸ்)
நிந்தவுர்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச
செயலாளர் அப்துல் லத்தீப் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், நிந்தவுர் பிரதேச
சபையின் முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர், பள்ளிவாசல் தலைவர்கள். சமூக அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.
இவ்
வருடத்தில் நிந்தவுர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி,சுகாதாரம்,வீதி அபிவிருத்தி, விவசாயம்,நீர்ப்பாசணம், கடலறிப்பு, கட்டுமாண வேலைத்திட்டங்கள்,செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான அனுமதியும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
வன
ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அசமந்தமான போக்கினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நுற்றுக்கணக்கான ஏக்கர் நெற் காணிகளை யானை துவம்சம் செய்து வருவதாகவும் இங்கு பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதன்போது
கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்கள் வன
ஜீவராசிகள் அதிகாரிகளின் அசமந்தப் போக்கை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், விவசாய நெல் உற்பத்தியை யானைகளின் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக அவர்களது
சொந்த செலவில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் யானை வேலி அமைக்கும் செயற்பாடுகளுக்கு வன
ஜீவராசிகள் அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென கடுமையான தொனியில் உத்தரவிட்டார்.
ஒலுவில்
துறைமுக அபிவிருத்தி முன்னெடுப்பினால் நிந்தவுர் பிரதேசத்தில் கடலரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வாழ்வாதார நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானமும் ஏனமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும்,
ஒலுவில் துறைமுகம் இயக்கப்படாமல் சிலரின் தேவைக்காகப்
பயன்படுத்தப்படுவது எல்லோரும் அறிந்த விடயமாகும். அவ்வாறு ஒலுவில் துறைமுகம் இயங்காவிட்டால் அதற்காகப் போடப்பட்ட தரைக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
No comments: