Responsive Advertisement 2

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் வெளியீடு

 



(எஸ்.எம். அறூஸ்)

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை ஏற்பாட்டில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார மீள் கட்டமைப்புக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்களில் ஒருவரான பேராசிரியர் மர்ஹூம் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் வெளியீடு நேற்று மாலை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.


கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும் ஓய்வு நிலை பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பி. பாலசுந்தரம் பிள்ளையும், சிறப்பு அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்  பேராசிரியர் றமீஸ் அபுபக்கரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இங்கு நூல்  வெளியீட்டுரையை முகாமைத்துவ வணிக பீடத்தின்  பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் நிகழ்த்தியதுடன் நூல் அறிமுகத்தை கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார்.


நூலின் முதற் பிரதியை பேராசிரியர் ஹஸ்புல்லாவின் பாரியாருக்கு பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,கல்விமான்கள்,அரசியல் பிரமுகர்கள்,இலக்கியவாதிகள்,ஊடகவியலாளர்கள்,சமூக சேவையாளர்கள் ஆகியோருக்கு  அதிதிகளினால் நூல் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


மன்னார் எருக்கலம்பிட்டியில் பிறந்த பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் அவர்கள் பேராதனைப் பல்பலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியதுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார மீள் கட்டமைப்புக்கான மூலோபாயங்களை வகுப்பதிலும், 30 வருட உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலும் இடம்பெயர்ந்து சிதறியிருந்த வட மாகாண முஸ்லிம்களின் மீள் எழுச்சிக்கும் அவர்களின் வாழ்வியல் கட்டமைப்புக்கும் தனது தறையுடனான ஆய்வுத்துறையில் அறிவியல்,ஆத்மார்த்த பங்களிப்புகளை வழங்கியவர்களில் பேராசிரியர் ஹஸ்புல்லாவுக்கு தனியிடமுண்டு.


இந்நூல் வெளியீட்டு  விழாவில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள்,மர்ஹூம் பேராசிரியர் ஹஸ்புல்லாவின் குடும்ப உறவுினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

































































பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் வெளியீடு பேராசிரியர்  எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் வெளியீடு Reviewed by Admin on August 01, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3