Responsive Advertisement 2

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா




(எஸ்.எம்.அறூஸ்)


அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 5ம் திகதி  சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக   நடைபெறவுள்ளதாக  பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் தலைவரும்  தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் தெரிவித்தார்.


பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா தொடர்பான உடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை கல்லூரியின் வளாகத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தகவலை கல்லூரியின் தலைவர் ஹனீஸ் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,   இவ்விழாவில் பிரதம அதிதியாகவும் சிறப்புப் பேச்சாளராகவும் கொழும்பு ஸம் ஸம் பௌண்டேசன் தலைவர் அஷ்சேய்க் எம்.எச்.முஹம்மட் யூசுப்  முஃப்தி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும், விழாவின் பெண்கள் அரங்கிற்கு வைத்திய நிபுணர் ஆபீதா  கையும் தலைமை தாங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


இப்பட்டமளிப்பு விழாவில் 38 ஆலிமாகளும், 30 ஹாபிழாகளும் பட்டங்களைப் பெறவுள்ளனர். மொத்தமாக பட்டம் பெறும் 68 பேரில் 14 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.


நல்ல சிந்தணையோடு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி பல இடர்பாடுகளையும், சவால்களையும் எதிர்கொண்டு இன்று நல்லதொரு நிலைக்கு வந்திருக்கின்றது. இதற்குக் காரணமானவர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்களுக்கு எமது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை  அரபுக் கல்லூரியுடன் இணைந்ததாக 2018ம் ஆண்டு பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி  ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கல்லூரியின் அதிபர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.






அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா Reviewed by Admin on August 02, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3