Responsive Advertisement 2

உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை!

 



மக்களைக் கொல்லும், மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்றும், தீவிர இடதுசாரி அல்லது தீவிர முதலாளித்துவ கொள்கையை விடுத்து மூன்றாவது வழியை பின்பற்றும் கட்சியாக இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடிய போதிலும் முறையான மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும், இப்படியான பொய்யான மோசடி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தாங்கள் தயாராக இல்லையென்றாலும், நாட்டுக்கு சாதகமான மற்றும் சரியான முடிவுகள் எடுக்கப்படும் இடத்தில் பதவிகள் சலுகைகளை நிராகரித்து சரியான நிலைப்பாட்டில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (16) நடைபெற்ற எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு தற்போது மக்கள் ஆணையற்ற, நம்பிக்கையற்ற அங்கீகாரம் இல்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் ஆளப்படுவதாகவும், நாட்டையே வங்குரோத்தாக்கிய கும்பலை வைத்து அரசியல் நாடகம் ஆடி குழுவாத பூசல்களை உருவாக்கி நாட்டின் தேச நலனைக் கருதாமல், தங்கள் தனிப்பட்ட பேராசையின் அடிப்படையில் பதவிகள் மற்றும் சலுகைகளுக்கு பேராசை கொண்ட கொள்கையற்ற ஆட்சியை நாட்டில் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இந்த யோசனைகளில் உள்ள மனிதாபிமானமற்ற முன்மொழிவுகளை வன்மையாகக் கண்டிக்கப்பதாகவும், இந்நாட்டில் எந்தப் பெண்ணுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இத்தகைய கடுமையான மற்றும் ஆபத்தான முன்மொழிவுகளுடன் உடன்பட முடியாது என்றும், சர்வதேச உடன்பாடுகள் மற்றும் கொள்கைகளை மீறி, மொழிக் கொள்கைகளை மீறி, அரசியலமைப்பை மீறி அடிப்படை உரிமைகளை மீறிய அரசாங்கம் முன்வைத்திருக்கும் மக்கள் விரோதப் பிரேரணைகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டில் செழிப்பை உருவாக்க, செல்வம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், சோசலிசத்தால் அது சாத்தியமில்லை என்றும், இதற்கு மனிதாபிமான முதலாளித்துவத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனியார் முயற்சியாண்மைகளுக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் அதிகபட்ச ஒத்துழைப்பை நல்கி, மனிதநேய முதலாளித்துவத்தைப் பயன்படுத்தி செல்வம் பெருவளமாக்கம் சாமானிய மக்களிடையே பகிரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2016 குடும்ப வருமானச் செலவுக் கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் தேசிய வருமானத்தில் 20 சதவீத செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 52 சதவீதத்திற்கும் அதிகமாகவும், வறியோர் 4 அல்லது 5 சதவீதத்தை அனுபவிக்கின்றனர் என்றும், இங்கு மனிதாபிமானமற்ற முதலாளித்துவமே நிலவுவதாகவும், இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பாதுகாக்கப்படுவது வேலைவாய்ப்பினால்தான் அன்றி வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே செல்வத்தை உருவாக்குவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு திறமையான மற்றும் இயலுமை கொண்ட பணியாளர்கள் தேவை என்றும்,அவ்வாறு உருவாக்கப்படும் செல்வத்தை சமூக நீதியின் அடிப்படையில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொழிலாளர் பாதுகாப்பும் செல்வ உருவாக்கமும் ஒன்றாக செல்ல வேண்டும் என்றும், இத்தகைய அறிவார்ந்த உகந்த தீர்வை நாட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், உழைக்கும் மக்களுடனே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளதாகவும், எனவே ஊழியர் சேமலாப நிதியங்களில் கை வைத்துள்ள அரசாங்கத்துடன் உடன்பாடுகளை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தீர்வுகளை தேடும் முற்போக்கான எதிர்க்கட்சி என்ற வகையில்,உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பதாகவும், மக்கள் ஆணைக்கு புறம்பாக எந்த பதவியையும் சலுகைகளையும் ஏற்க தயாராக இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை! உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை! Reviewed by Admin on August 17, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3