Responsive Advertisement 2

நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையை தற்காலிகமாக இடமாற்றுவதற்கு அனுமதி




 (எஸ்.எம்.அறூஸ்)


நெற்சந்தைப்படுத்தும் சபையின் பராமரிப்பில் உள்ள  நிந்தவூர் நெற் கள்ஞ்சியசாலையின் பாவிக்கப்படாமல் உள்ள  கட்டிடத்தில் நிந்தவூர்  ஆயுள்வேத ஆராய்ச்சி  வைத்தியசாலையை தற்காலிகமாக  இடமாற்றுவதற்கு பிரதேச ஒருங்கினைப்பிக் குழுவின் உப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் உப குழுவின் கூட்டம் நேற்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீபின் நெறிப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

 இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பிப்பினர் பைசல் காசீம்,நிந்தவூர் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அமைப்புகளின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், வட்டானை அமைப்புகளின் பிரதிநிதி, நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஏ.றஸீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி  வைத்தியசாலைக்கான நிரந்தரமான கட்டிடம் அமைக்கப்படும் வரை  தற்காலிகமாக  நெற் களஞ்சியசாலையின் பாவிக்கப்படாமல் உள்ள  கட்டிடத்தில்  இடமாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கடந்த நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. இங்கு இப்பிரேரணை தொடர்பில் ஆராய்ந்ததுடன் விவசாய அமைப்புகள் மற்றும் சகல தரப்பினருடன் கலந்துரையாடுவதற்காக உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் நேற்றைய கூட்டத்தில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி  வைத்தியசாலையை விரைவாக நெற்சந்தைப்படுத்தும் சபையின் பராமரிப்பில் உள்ள நிந்தவூர்  நெற் கள்ஞ்சியசாலையின் பாவிக்கப்படாமல் உள்ள  கட்டிடத்திற்கு  இடமாற்றுவதற்கு சகல தரப்பினரும் இனக்கம் தெரிவித்ததுடன் அதற்கான அனுமதியையும் வழங்கினர்.

நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி  வைத்தியசாலைக்கான நிரந்தரமான கட்டிடம் அமைக்கப்படும் வரை  ஐந்து வருடங்களுக்கு  தற்காலிகமாகவே இக்கட்டிடத்தை வழங்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

















நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையை தற்காலிகமாக இடமாற்றுவதற்கு அனுமதி நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையை தற்காலிகமாக இடமாற்றுவதற்கு அனுமதி Reviewed by Admin on October 23, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3