Responsive Advertisement 2

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு

 



(எஸ்.எம்.அறூஸ்)

உண்மை,ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை உருவாக்குவதற்காக அது தொடர்பான தத்துவங்கள் மற்றும் பணிகளை எடுத்துக்கூறுவதற்கும் பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு அம்பாரை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் தலைவரும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரஞ்சித் ஆரியரத்ன, கலாநிதி யு.வி.தங்கராசா, சிரேஸ்ட சட்ட ஆலோசகர்  இஸட் ஏ.எப். வஸ்னியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த கல்விமான்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்,அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தாபிக்க வேண்டியதன் அவசியத்தை  இடைக்கால செயலகத்தின் தலைவர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்,அதிகாரிகள் இங்கு விளக்கப்படுத்தினர்.அத்தோடு  நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்கள் அனுபவங்கள் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறை தொடர்பாக  பரிந்துரைகளை இங்கு பகிர்ந்து கொண்டனர்.











உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு Reviewed by Admin on August 02, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3