Responsive Advertisement 2

முசாரப் எம்.பி.யின் பொத்துவில் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் - ரணிலுக்கு வாக்களிப்பதாகவும் கரகோசத்துடன் தெரிவிப்பு

 



{எஸ்.எம்..அறூஸ்)


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் அழைப்பின் பேரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று மாலை பொத்துவிலுக்கு விஜயம் செய்தார்.


பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தியதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தனக்கு வாக்களிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களினால் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மிகக் கூடுதலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இப்பிரச்சாரக் கூட்டத்தில்  வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான்,அலி சப்ரி றஹீம், முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதியமைச்சர்களான அனோ கமகே, சிறியானி விஜேவிக்ரம உள்ளிட்ட பலரும் பங்கேற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்..எம்.எம். அவர்களின் பிரதேச இணைப்பாளர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சுமார் நான்கு வருட அரசியல் அனுபவத்தைக் கொண்ட முசாரப் அவர்களின் தலைமையின் கீழ் அம்பாரை மாவட்ட மக்கள்  அணி திரண்டு வருவதை இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர்கள் பலரும் பாராட்டிப்பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.






















































முசாரப் எம்.பி.யின் பொத்துவில் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் - ரணிலுக்கு வாக்களிப்பதாகவும் கரகோசத்துடன் தெரிவிப்பு முசாரப் எம்.பி.யின் பொத்துவில் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் - ரணிலுக்கு வாக்களிப்பதாகவும் கரகோசத்துடன் தெரிவிப்பு Reviewed by Admin on August 24, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3