திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் அழைப்பின் பேரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை மாலை பொத்துவிலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்துவதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தனக்கு வாக்களிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களினால் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கூடுதலான பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முசாரப் எம்.பி.யின் அழைப்பில் ஜனாதிபதி பொத்துவிலுக்கு விஜயம்
Reviewed by Admin
on
August 22, 2024
Rating:

No comments: