Responsive Advertisement 2

மாற்றுக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு SLPP கடிதம்!

 


மாற்றுக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு SLPP கடிதம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரினால், அந்த கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி கூடிய அரசியல் குழு, ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரைப் பெயரிடுவதற்கான யோசனைகளை நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, வேறு வேட்பாளருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்தால், குறித்த உறுப்பினர் கட்சியின் ஒழுக்கத்தை மீறியவராகக் கருதப்பட்டு, அவரது கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு, கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத் தலைவராகச் செயற்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவை நியமிக்க அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மாற்றுக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு SLPP கடிதம்! மாற்றுக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு SLPP கடிதம்! Reviewed by Admin on August 04, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3