சிலிண்டர் சின்னத்திற்கு மூன்று அசனங்கள் கிடைப்பது உறுதியாகும்.
(எம்.ஜே.எம்.சர்ஜூன்)
அவ்வாறு மூன்று ஆசனங்கள் சிலிண்டர் சின்னத்திற்குக் கிடைக்கும்போது அதில் வெற்றி பெறுகின்ற மூவரும் முஸ்லிம்களாகவே தெரிவாகவுள்ளனர். இப்படியான அருமையான வாய்ப்பை பயன்படுத்த வேண்டியது நமது எல்லோரினதும் கடமையாகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நமது கட்சிதான் வெல்லும் என்ற பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடாமல் சமூகத்தின் எதிர்கால இருப்பைக் கவனத்தில் கொண்டு புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தை ஆதரிக்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.
நாட்டின் சமகால அரசியல் தளத்தை எதிர்கொள்ளும் ஆளுமைமிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான களத்தில் நாம் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயமாகும்.
பிரதேச வாதங்களைக் கடந்து சமூகம் வெற்றி பெற வேண்டும். ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தும் முஸ்லிம் கட்சிகளை கிழக்கைவிட்டு துரத்துவதற்கான அருமையான சந்தர்ப்பம் இதுவாகும்.
சிங்களத்தலைவர்கள் முஸ்லிம்களை விரல் நீட்டி கதைப்பதற்கு கண்டியாரும், வன்னியாருமே காரணமாகும். பொய்யும், புரட்டும் நீண்டகாலத்திற்கு நிலைக்காது. 2024ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இவர்கள் இருவரும் படு தோல்வி அடைவது நிதர்சனமான உண்மையாகும்.
அம்பாரை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்திற்கு மூன்று அசனங்கள் கிடைப்பது உறுதியாகும்.
Reviewed by Admin
on
October 14, 2024
Rating:

No comments: