Responsive Advertisement 2

தேர்தல்கள் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

 



(எஸ்.எம்.அறூஸ்)

தேர்தல்கள் திணைக்களம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் அம்பாரை மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல்கால ஊடக அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று அம்பாரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம் மற்றும் பிணக்குகள்) பி.சி.குலரத்ன, தேர்தல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் சன்ன சில்வா, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் கால ஊடக அறிக்கையிடல் தொடர்பில் கருத்துக்களையும், அதற்கான சட்டதிட்டங்களையும் தெளிவுபடுத்தினர்.

ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம வாய்ப்பினை வழங்குவதுடன் பக்கச்சார்பில்லாமல் கடமையாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இங்கு எடுத்துக்கூறியதுடன் தேர்தலில் நேரடியாக தொடர்புபட்டு ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் தாங்கள் கடமையாற்றும் ஊடக நிறுவனத்தின் நற்பெயரை களங்கப்படுத்தாமல் தேர்தல் முடியும் வரை ஊடக பணியிலிருந்து ஒதுங்கியிருப்பது சிறப்பாகும்.

எப்போதும் ஊடகவியலாளர்கள் ஊடக ஒழுக்கத்துடன் பணியாற்றுவதே மக்கள் விரும்பும் அரசியல் தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதலான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடடத்தக்கதாகும்.

















தேர்தல்கள் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு தேர்தல்கள் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு Reviewed by Admin on October 18, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3