கல்முனை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துள்ள துரோகம் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புச் செயலாகும் - லொயிட்ஸ்
கல்முனை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துள்ள துரோகம் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புச் செயலாகும்.
பாராளுமன்ற பிரதிநிதித்துவம், அரசியல் விவகாரங்கள் என்பவற்றைத் தாண்டி கல்முனை மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் குழிதோண்டிப் புதைத்துள்ள நாகரிகமற்ற அரசியல் பழிவாங்கல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றமை மிக மோசமானது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளருமாகிய லொயிட்ஸ் ஆதம்லெப்பை தெரிவித்தார்.
கல்முனை மாநகரம் இலங்கை வாழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னோடி நகராகும். பல்வேறு அழுத்தங்கள் அப்பிரதேசத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட போதெல்லாம் ஹரீஸ் எம்பி தனித்து அவற்றை எதிர்த்து நின்றவர். அவருக்கு இவ்வாறான சதியை செய்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது பலத்த அதிருப்தியினையும், கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் கல்முனை மாநகர மக்களின் அபிலாஷைகளை வென்றடுக்க நாமும் எமது வேட்பாளர் குழுவும் உறுதியுடன் செயற்படுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஊடகப் பிரிவு

No comments: