Responsive Advertisement 2

ஹத்துருசிங்கவை நீக்கிய பங்களாதேஷ்!

 


பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ள சந்திக ஹத்துருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.

அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை சேவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 செம்பியன் கிண்ணம் வரை இடைக்கால பயிற்சியாளராக இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில், பங்களாதேஷின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இரண்டாவது முறையாக அணியில் இணைந்தார்.

எனினும், முன்னாள் அணித் தலைவர்கள் மற்றும் நாட்டின் தற்போதைய கிரிக்கெட் தலைவர் பரூக் அஹமட் ஆகியோர் ஹத்துருசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்தியது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஹத்துருசிங்கவை நீக்கிய பங்களாதேஷ்! ஹத்துருசிங்கவை நீக்கிய பங்களாதேஷ்! Reviewed by Admin on October 15, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3