முசாரப் எம்.பி.மீது சம்மாந்துறையில் மயில் கட்சி காடையர் கும்பலினால் தாக்குதலுக்கு முயற்சி
(எஸ்.எம்.அறூஸ்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தடுத்து அவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக அப்னான் என்கின்ற ரிசாட்டின் எடுபிடியின் தலைமையில் கொலைகார கும்பல் ஒன்று அடாவடி செயற்பாட்டில் இறங்கியதாக தெரியவருகிறது.
ஜனநாயக விழுமியங்களை எப்போதும் மதித்து அரசியல் பணி செய்வதில் முதன்மையாக செயற்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் மீது தாக்குதல் நடாத்த கும்பலாக வந்து அவரை வழி மறித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
எனவே இவ்வாறான காட்டு மிராண்டித்தனமான சண்டித்தன அரசியலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காடையர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தங்களுக்கும் இனி ஏனைய ஊர்களில் சென்று அரசியல் செய்ய கடினமாக அமையும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களைப் பற்றி அபாண்டங்களை தொடர்ச்சியாக பேஸ்புக் தளங்களில் எழுதி வருவதுடன் அச்சுறுத்தி தாக்குதல் நடாத்தும் அளவிற்கும் அறிக்கைகளையும் அப்னான் என்பவர் விடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சம்மாந்துறையில் மீட்கப்பட்ட கைக்குண்டுக்கும், முசாரப் எம்.பி.மீதான தாக்குதலுக்கு முயற்சித்த குழுவினருக்கும் தொடர்பிருக்கலாம் என்கின்ற சந்தேகம் வலுக்கின்றது. பொலிஸார் உடன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
முசாரப் எம்.பி.மீது சம்மாந்துறையில் மயில் கட்சி காடையர் கும்பலினால் தாக்குதலுக்கு முயற்சி
Reviewed by Admin
on
October 23, 2024
Rating:

No comments: