Responsive Advertisement 2

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி!

 


சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி! ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி! Reviewed by Admin on October 23, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3