Responsive Advertisement 2

அரச ஊழியர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்

 


தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எந்தவொரு மூலோபாயத் திட்டமும் அற்றவை என்பதை அரச ஊழியர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் தொழிலதிபர்  திலித் ஜயவீர, பேராசிரியர் சன்ன ஜயசுமண, மிலன் ஜயதிலக்க உட்பட சர்வஜன அதிகாரத்தின் குறித்த மாவட்ட வேட்பாளர்கள் நேற்று திவுலப்பிட்டி தொகுதியின் விகாரைகளுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் தெவுந்தர, அக்குரஸ்ஸ, மாத்தறை மற்றும் தெனியாய ஆகிய தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம் நேற்று முற்பகல் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது.

அரச ஊழியர்கள் தற்போது உணர்ந்துள்ளனர் அரச ஊழியர்கள் தற்போது உணர்ந்துள்ளனர் Reviewed by Admin on October 30, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3