Responsive Advertisement 2

அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் இன்று பதவியேற்பு

 


(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் அவர்கள் இன்று காலை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராகக் கடமையாற்றி வந்த கமல் நெத்மினி அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கல்முனை மாநாகர சபையின் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றும் எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை புதிய பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் அவர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.டி.எம்.ராபி, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றும் நிலையிலேயே பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளராகவும் எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் மிகச்சிறப்பாகக் கடமையாற்றி பலரினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர் என்பதுடன் கல்முனை மாநகர சபையின் சிறந்த செயல்பாட்டிற்கும் முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்றாகும்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கூடுதலான உள்ளுராட்சி மன்றங்களைக் கொண்டுள்ள அம்பாரை மாவட்டத்திற்கு ஆளுமையும்,ஆற்றலும், நேர்மையும்  கொண்ட  இளம் வயதுடைய பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.



























அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் இன்று பதவியேற்பு அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.எஸ்.அஸீம் இன்று பதவியேற்பு Reviewed by Admin on January 21, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3