பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தெரிவு
(ஏ.ஆர்.எம்.சியாத்)
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்று காலை சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.ரீ.ஆதம்பாவா தலைமையில் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோதே பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் பொதுச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த ஒருவருட காலமாக அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இடைக்கால பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயற்பட்டு வந்த எஸ்.எம்.அறூஸ் அவர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சிறந்த முன்னெடுப்புகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில் பொதுச்சபை உறுப்பினர்களால் மீண்டும் பணிப்பாளர் சபை உறுப்பினராக எஸ்.எம்.அறூஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை கூட்டுறவுச் சங்கத்தின் எழுச்சிக்கு கால்கோளாக அமையும் என பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக கூட்டுறவுத்துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட சிரேஸ்ட சுகாதாரக் கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments: