Responsive Advertisement 2

உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 


உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 
  பாறுக் ஷிஹான்

மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்து  சட்டத்தை மீறிய ஆறு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 65000/- தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய   சுகாதார வைத்திய அதிகாரிகளினால்   புதன் கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட உணவு நிலையங்கள்  உணவுச் சட்டத்தை மீறிய இரண்டு பேக்கரிகள் உட்பட ஆறு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது  வட்டிலப்பம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் ஒருவருக்கு colour code (உப்பு, இனிப்பு, கொழுப்பு) இடாமல் விற்பனை செய்தமை தொடர்பாக இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30) வியாழக்கிழமை குறித்த ஆறு உணவகங்களுக்கு மொத்தமாக ரூபா 65000/- தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.




உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Reviewed by Admin on January 31, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3